சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதைக் கண்டறிதல்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 3:30PM by PIB Chennai
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள நெல் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, கண்காணிப்பதற்கான பல அடுக்கு வழிமுறைகளை அரசு பின்பற்றுகிறது.
செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி, பயிர்க்கழிவுகள் எரியும் நிகழ்வுகளை மதிப்பிடுவதற்கான ஒரு நிலையான நெறிமுறை, மாநில தொலைதூர உணர்திறன் மையங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு, ஆகஸ்ட் 2021 இல் வெளியிடப்பட்டது.
செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது பிராந்திய அளவில் வெற்றிகரமாகக் கண்காணிக்கப்படுகிறது. பயிர்க்கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்களைக் கண்டறிவதை மேலும் வலுப்படுத்துவதற்காக, மாலை நேரங்களில் அமலாக்க முகமைகளின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் நெல் அறுவடைக் காலத்தில் தீ விபத்துகள் சுமார் 90% குறைந்துள்ளன.
இந்தத் தகவலை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223752®=3&lang=1
***
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224334)
வருகையாளர் எண்ணிக்கை : 7