அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள்

प्रविष्टि तिथि: 05 FEB 2026 3:25PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) அறிக்கையான “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புள்ளிவிவரங்கள் 2022-23”-ன் படி, நாட்டில் ஆராய்ச்சிக்கான செலவு அதிகரித்து வருகிறது. பொது மற்றும் தனியார் ஆராய்ச்சி - மேம்பாட்டு செலவினங்களை உள்ளடக்கிய மொத்தச் செலவு, பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது 2010-11-ல் ₹60,197 கோடியிலிருந்து 2020-21-ல் ₹1,27,381 கோடியாக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அறிவியல் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறு முக்கிய அறிவியல் நிறுவனங்கள்/துறைகள், சில உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முறையான, மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு, நாட்டில் ஆராய்ச்சித் திறன், மனித வள மேம்பாடு, அதிநவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. அறிவியல் - தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் 3,285 கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழக  அறிவியல் ஆராய்ச்சி சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 91 பல்கலைக்கழகங்களுக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளால் ஆராய்ச்சி சூழல் அமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த முதலீடுகள் உலகளாவிய செயல்திறனை மேம்படுத்தியுள்ளன, இந்தியா, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2025-ல் 38-வது இடத்தையும் , காப்புரிமை தாக்கல்களில் உலகளவில் 6-வது இடத்தையும், ஆராய்ச்சி வெளியீடுகளில் உலக அளவில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223742&reg=3&lang=1

(Release ID: 2223742)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2224146) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी