அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்திய மொழிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான முன் முயற்சிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 3:23PM by PIB Chennai

இந்திய மொழிகள் மற்றும் சமூக சூழலுக்கு ஏற்ப  வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இவை குரலை வார்த்தைகளாக மாற்றுவது, வார்த்தைகளை குரலாக மாற்றுவது உட்பட பன்முகத்தன்மை பல்வேறு செயல்பாடுகளுக்கு வகை செய்கிறது.

தற்போது பாரத்ஜென் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலிகள் இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மைதிலி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 15 இந்திய மொழிகளில் மாதிரி அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடிப்படையிலான செயலிகள் விரைவில்அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து 22 மொழிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும்.

பாரத்ஜென்  ஆயுர்வேதம், விவசாயம், சட்டத்துறை ஆகிய துறைகளுக்காக சிறப்புப் பயிற்சிகளுடன் கூடிய மாதிரிகளையும் வெளியிட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223738&reg=3&lang=1

 

****

TV/SV/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2224135) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Telugu