பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுமக்கள் குறைதீர்ப்பு முறையில் முன்னேற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 12:57PM by PIB Chennai

2025-ல், மாநிலங்கள் /யூனியன் பிரதேச அரசுகளுக்கு பொதுக் குறை தீர்ப்பு அமைப்பில் உள்ள குறைகளைத் தீர்க்க சராசரி நேரம் 64 நாட்களாக இருந்தது.

 

மத்திய அரசின் பொதுக் குறைதீர்ப்பு அமைப்பின் கீழ் 10-கட்ட  சீர்திருத்தங்களை செயல்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள குறைகளைக் குறைப்பதற்கும் குறை தீர்க்கும் செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் குறைகளை மூத்த நிலையில் ஆய்வு செய்வதற்கு வசதியாக இதில் ஒரு சிறப்பு ஆய்வுக் கூட்டத் தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. குறை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து மாநிலங்கள் /யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரிகள் திறனை மேம்படுத்துவதற்காக, "சேவோட்டம்" திட்டத்தின் கீழ் நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 1,010 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 33,775 அதிகாரிகள் பயனடைந்துள்ளனர். குறைகளை சரியான நேரத்தில் தீர்ப்பதை உறுதி செய்வதற்காக, நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் மாதாந்தர ஆய்வுக் கூட்டங்களையும் நடத்துகிறது. மேலும், சமீபத்திய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மத்திய அரசின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முறைக்கு ஒரு முழுமையான தகவல் தொழில்நுட்பத் தீர்வின் புதிய வளர்ச்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.

 

சில துறைகளில் 2023 முதல் 2025 வரை குறை தீர்ப்பு விவரங்கள்:

மத்திய நேரடி வரிகள் வாரியம் (வருமான வரி)  நிலுவை 13033  பெறப்பட்டவை 199627 தீர்வு காணப்பட்டவை 207615

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்  நிலுவை 766 பெறப்பட்டவை 40850 பைசலானவை 41423

நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் குறைதீர்ப்பு துறை நிலுவை  882 பெறப்பட்டவை 15566 பைசலானவை 16264

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிலுவை  5150 பெறப்பட்டவை  281338 பைசலானவை 285438

முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை நிலுவை  1498 பெறப்பட்டவை 121691 பைசலானவை 122072

நிதி சேவைகள் துறை (வங்கி பிரிவு) நிலுவை  6745 பெறப்பட்டவை 522723 பைசலானவை 525223

நிதி சேவைகள் துறை (காப்பீட்டு பிரிவு) நிலுவை 1095 பெறப்பட்டவை 90632 பைசலானவை 91242

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிலுவை 2108 பெறப்பட்டவை 120114 பைசலானவை 120216

உயர்கல்வித் துறை நிலுவை 1617 பெறப்பட்டவை 63675 பைசலானவை 64020

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நிலுவை 2737 பெறப்பட்டவை 67255 பைசலானவை 69183

கிராமப்புற மேம்பாட்டுத் துறை நிலுவை 1393 பெறப்பட்டவை 765059 பைசலானவை 765432

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நிலுவை 1472 பெறப்பட்டவை 49036 பைசலானவை 49530

உள்துறை அமைச்சகம் நிலுவை 2101 பெறப்பட்டவை 178071 பைசலானவை 174636

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நிலுவை 898 பெறப்பட்டவை 106946 பைசலானவை 106034

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிலுவை 3025 பெறப்பட்டவை 603012 592908

ரயில்வே அமைச்சகம் (ரயில்வே வாரியம்)  நிலுவை  2457 பெறப்பட்டவை 203936 பைசலானவை  202011

இந்தத் தகவலை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223641&reg=3&lang=1

 

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2224043) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR