பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கும் சிபிஜிஆர்ஏஎம்எஸ்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 12:56PM by PIB Chennai

மாநில/யூனியன் பிரதேச அரசுகளால், மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சிபிஜிஆர்ஏஎம்எஸ் (CPGRAMS) மூலம்  பொது மக்களின் குறைகள் பெறப்பட்டுத் தீர்க்கப்படுகின்றன. மத்திய அமைச்சகங்கள்/துறைகள் தொடர்பான குறைகளுக்கான மேல்முறையீட்டு வழிமுறை சிபிஜிஆர்ஏஎம்எஸ்-ல் உள்ளது.

சிபிஜிஆர்ஏஎம்எஸ் என்பது 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள இணையதளமாகும். இது பொதுமக்கள் குறைகளை பதிவு செய்தல், கண்காணித்தல், மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றை எளிதாக்குகிறது. குறைகளைத் தீர்க்கும் பொறுப்பு அந்தந்த அமைச்சகங்கள், மாநில/யூனியன் பிரதேச அரசுகளைச் சேர்ந்தது.

சிபிஜிஆர்ஏஎம்எஸ்-ன் கீழ் 10 அம்ச சீர்திருத்தங்களை செயல்படுத்துவதன் மூலம், நிலுவையில் உள்ள குறைகளைக் குறைப்பதற்கும், குறை தீர்க்கும் செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், குறை தீர்க்கும் காலக்கெடுவை 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைப்பதற்கும், பிரத்யேக குறை தீர்க்கும் பிரிவுகளை நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கும், மூல காரண பகுப்பாய்வில் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும், விரிவான வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் 2024-ல் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் குறைகளை ஆய்வு செய்வதற்கு வசதியாக சிபிஜிஆர்ஏஎம்எஸ்-ல் ஒரு பிரத்யேக ஆய்வுப் பிரிவு செயல்படுத்தப்பட்டுள்ளது. குறை தீர்க்கும் வழிமுறைகளில் மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காக நிர்வாகப் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 1,010 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 33,775 குறை தீர்க்கும் அதிகாரிகள் பயனடைந்துள்ளனர். குறைகளை சரியான நேரத்தில் தீர்ப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களையும் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை நடத்துகிறது.

இந்தத் தகவலை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (05.02.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2224036) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी