புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை மாற்றத்தினால் வானிலையில் ஏற்படும் தாக்கத்திற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 11:42AM by PIB Chennai

பருவநிலை மாற்றம் காரணமாக  மழை மற்றும் வெப்பநிலையில் ஏற்படக்கூடிய கடும் தாக்கங்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் மததிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய புவிஅறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் பிற துறை சார்ந்த ஆய்வு மையங்கள், மாநில அரசுகள், உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுடன்  ஒருங்கிணைந்து வானிலையில் ஏற்படும் கடுமையான தாக்கங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்கவும் முன்கூட்டியே கணித்து மக்களுக்குத் தேவையான முன்னறிவிப்புகளை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கென தானியங்கி ஆய்வு மையங்கள், தானியங்கி மழைமானிக் கருவிகள், டாப்ளர் எனப்படும் வானிலை ரேடார் அமைப்புகள் போன்ற நவீன கருவிகளுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 47 டாப்ளர் வானிலை ரேடார்கள் செயல்பாட்டில் உள்ளன. 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223579&reg=3&lang=1    

----

TV/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2223992) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी