சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
குடும்ப நீதிமன்றங்ளில் விசாரணை நடைமுறைகளின் காணொலிக் காட்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன –மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 1:02PM by PIB Chennai
குடும்ப நீதிமன்றச் சட்டம், திருமணம் மற்றும் குடும்பந விவகாரங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கும், சமரசம் செய்து வைப்பதற்கும் விசாரணை தொடர்பான பிற நடைமுறைகளுடன் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுடன கலந்தாலோசித்து மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் குடும்ப நீதிமன்றங்களை நிறுவ வகை செய்கிறது. குடும்ப நீதிமன்றச் சட்டப்பிரிவு 3(1)(ஏ)-ன் கீழ் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற பகுதிகளில் ஒரு குடும்ப நீதிமன்றம் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள குடும்ப நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் 3-ம் கட்டமாக பல்வேறு நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அமைப்புகளில் உள்ள காணொலிக் காட்சிக்கான வசதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 228.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 3,240 நீதிமன்ற வளாகங்கள், 1272 சிறைச்சாலைகளில் காணொலிக் காட்சி வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய வசதிகள் நீதிமன்ற விசாரணைகளை எளிதாக்குவதுடன் கணிசமான நேரமும், பணமும் சேமிக்க உதவுகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன்ராம் மெக்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223644®=3&lang=1
----
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2223980)
வருகையாளர் எண்ணிக்கை : 9