புவி அறிவியல் அமைச்சகம்
தில்லியில் செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு தொடர்பான மதிப்பீடு
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 11:47AM by PIB Chennai
10.05.2025 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபடி, தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசின் சுற்றுச்சூழல் துறை, இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி-யுடன் இணைந்து, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு தொழில்நுட்ப மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு முன்னோடித் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு முதல் தவணையாக 37,93,420 ரூபாய் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த மேக விதைப்பு செயல்பாடு சோதனை கட்டத்தில் உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேக விதைப்பு நடவடிக்கைகளில் புவி அறிவியல் அமைச்சகம் நேரடியாக ஈடுபடவில்லை. இருப்பினும், அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், மழைப்பொழிவு மேம்பாட்டு பரிசோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மழை மறைவுப் பகுதிகளில் மேக விதைப்பு மூலம் மழையை அதிகரிப்பது குறித்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் இந்த இணையதளத்தில் உள்ளன.
https://www.tropmet.res.in/~lip/Publication/Technical-Reports/CAIPEEX-Report-July2023.pdf
இந்தத் தகவலை புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (பிப்ரவரி 5, 2026) மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2223590)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223951)
வருகையாளர் எண்ணிக்கை : 8