ரெயில்வே அமைச்சகம்
ஏர்பஸ் மற்றும் கதி சக்தி விஸ்வவித்யாலயா இணைந்து வதோதராவில் ‘சிறப்பு மையம்’ தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2026 7:17PM by PIB Chennai
குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள, போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைக்கான இந்தியாவின் ஒரே மத்தியப் பல்கலைக்கழகமான கதி சக்தி விஸ்வவித்யாலயாவில் , ஏர்பஸ் நிறுவனம் வான்வெளி ஆய்வுகளுக்கான ஒரு சிறப்பு மையத்தை இன்று தொடங்கியது.
ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியப் பிரிவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஜூர்கன் வெஸ்டர்மேயர் இந்த மையத்தைத் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மத்திய அமைச்சருமான திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில், துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) மனோஜ் சவுத்ரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சிறப்பு மையம் வான்வெளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நகராட்சி திடக்கழிவுகளை நிலையான விமான எரிபொருளாக மாற்றுவது குறித்த ஆராய்ச்சிகளில் இந்த மையம் முக்கியக் கவனம் செலுத்தும். இது விமானப் போக்குவரத்துத் துறையில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உதவும் ஒரு புரட்சிகரமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
தொழில் மற்றும் கல்வித்துறை இடையிலான இந்தக் கூட்டணி மாணவர்களின் நலனுக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஏர்பஸ் மற்றும் GSV இடையிலான ஒப்பந்தத்தின்படி, 45 ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வான்வெளித் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி, 'சுயசார்பு இந்தியா' மற்றும் 'விக்சித் பாரத் 2047' ஆகிய இலக்குகளை எட்டுவதற்கு இந்தத் கூட்டணி ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்று திரு. ஜூர்கன் வெஸ்டர்மேயர் தெரிவித்தார்.
***
(Release ID: 2223339)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223500)
வருகையாளர் எண்ணிக்கை : 8