பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடிமைப் பணி தேர்வில் மொழித் தேர்வை எழுதுவது கட்டாயம் அல்ல மத்திய அரசு தகவல்
प्रविष्टि तिथि:
04 FEB 2026 4:04PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகளை நடத்தி வருகிறது. குடிமைப் பணி தேர்வு விதிகள்-2025-ன் படி, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய மொழித் தேர்வு இடம் பெற்றுள்ள தாள்-ஏ எழுதுவது கட்டாயமாக்கப்படவில்லை.
நாடு முழுவதும் தேர்வு எழுதுவோர் இடையே சமநிலையை ஏற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அரசு தொடர்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2223105)
TV/IR/RJ/RK
(रिलीज़ आईडी: 2223478)
आगंतुक पटल : 48