பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – கிர்கிஸ்தான் கூட்டு சிறப்பு படையினர் பங்கேற்கும் பயிற்சி அசாமில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 04 FEB 2026 5:36PM by PIB Chennai

இந்தியா – கிர்கிஸ்தான் கூட்டு சிறப்பு படையினர் பங்கேற்கும் கன்ஜர் என்று அழைக்கப்படும் பயிற்சி அசாம் மாநிலம் மிசாமரில் 2026 பிப்ரவரி 4 அன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியா – கிர்கிஸ்தான் இடையே  இந்த கன்ஜர் பயிற்சி ஆண்டுதோறும் மாற்று அடிப்படையில் நடத்தப்படுகிறது. கடைசியாக இப்பயிற்சி 2025 மார்ச் மாதத்தில் கிர்கிஸ்தானில் நடைபெற்றது.

இந்திய ராணுவம் சார்பில் பாராசூட் பிரிவைச் சேர்ந்த 20 வீரர்களும், கிர்கிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்களும் இப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

நகர்ப்புற மற்றும் மலைப் பகுதிகளில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது, சிறப்பு படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

***

(Release ID: 2223244)

TV/IR/RJ/RK


(रिलीज़ आईडी: 2223408) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese