புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை முன்னறிவிப்புக்கான அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 04 FEB 2026 3:27PM by PIB Chennai

கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வானிலை முன்னறிவிப்பு  குறித்த தகவல்களை துல்லியமாக வழங்குவதில் 30 முதல் 40 சதவீதம் அளவிற்கு மேம்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அனைத்துவிதமான வானிலை நிகழ்வுகளை 1  முதல் 5 நாட்களுக்கான முன்னறிவிப்புகளாக வழங்குவதற்கான அமைப்பு முறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதி கனமழை போன்ற பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வானிலை குறித்த நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து மண்டல வாரியாக தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறைகள் மேம்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கர்நாடகா மாநிலத்தில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் வாட்ஸ் அப் எண்ணுடன் நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக  வானிலை குறித்த தகவல்களை அனுப்ப முடிவதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2223078)

TV/SV/KPG/RK


(रिलीज़ आईडी: 2223378) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी