விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய வேளாண் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்த மத்திய அரசு தீவிரம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 8:08PM by PIB Chennai

உலக சந்தையில் இந்தியாவின் வேளாண் மற்றும் அது சார்ந்த பொருட்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி சுமார் 51.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சியை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, மத்திய வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

 

குறிப்பாக, நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், விவசாயத்தில் தானியங்கி மற்றும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையாகப் பொருட்களைத் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெறும் மூலப்பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்யாமல், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக  மாற்றி ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால், அதற்கான சிறப்புப் பயிற்சிகளும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

 

ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த ஆணையம் தனது நிதி உதவித் திட்டத்தின் கீழ் மானியங்களையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. இது முக்கியமாக ஏற்றுமதி உள்கட்டமைப்பு, தர மேம்பாடு மற்றும் புதிய சந்தைகளைக் கண்டறிதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய சந்தையில் இந்திய வேளாண் பொருட்களின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும் முடியும் என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222798&reg=3&lang=1

 

 

***

TV/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2222978) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada