நித்தி ஆயோக்
மாநிலங்களை வலுப்படுத்தும் நிதி ஆயோக்கின் பிராந்தியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 5:26PM by PIB Chennai
நிதி ஆயோக் மற்றும் திரிபுரா அரசின் 'மாற்றத்திற்கான திரிபுரா நிறுவனம்' ஆகியவை இணைந்து, 'மாநில ஆதரவு திட்டத்தின்' கீழ் மூன்றாவது பிராந்தியக் கலந்துரையாடலை இன்று (பிப்ரவரி 3, 2026) திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வெற்றிகரமாக நடத்தின. இதில் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் தொடக்க விழாவில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா கலந்துகொண்டு சிறப்பித்தார். 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசாக்கும் 'வளர்ச்சியடைந்த இந்தியா' இலக்கை எட்டுவதற்கு, மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள 'மாற்றத்திற்கான மாநில நிறுவனங்கள்' எத்தகைய முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, வெறும் திட்டமிடலோடு நின்றுவிடாமல், நீண்டகால தொலைநோக்கு பார்வை, தரவு சார்ந்த கொள்கை உருவாக்கம் மற்றும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் இந்த நிறுவனங்கள் அறிவுசார் மையங்களாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான அனுபவப் பகிர்வு, உலகளாவிய கூட்டாண்மை மூலம் பிராந்திய வளர்ச்சியைத் துரிதப்படுத்துவது மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது போன்ற தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன. மாநிலங்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுப்பதன் மூலமே ஒட்டுமொத்த தேசிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இது போன்ற கூட்டங்கள் டேராடூன் மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222654®=3&lang=1
வெளியிட்டு எண்: 2222654
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222889)
வருகையாளர் எண்ணிக்கை : 10