உள்துறை அமைச்சகம்
சைபர் தடயவியல் ஆய்வகங்களை வலுப்படுத்த மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 4:11PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப் புலனாய்வு ஆகியவை மாநிலப் பட்டியலின் கீழ் வருகின்றன. இருப்பினும், சைபர் குற்றங்களை எதிர்கொள்ளவும், மாநில தடயவியல் அறிவியல் ஆய்வகங்களை (FSL) நவீனப்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
டிஎன்ஏ பகுப்பாய்வு மற்றும் சைபர் தடயவியல் திறன்களை மேம்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 'நிர்பயா நிதி' திட்டத்தின் கீழ் ரூ. 244.89 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் ரூ. 37.34 கோடி செலவில் தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (NCFL-E) நிறுவப்பட்டுள்ளது. மேலும், 'பெண்கள் பாதுகாப்பு' திட்டத்தின் கீழ் தில்லி, சண்டிகர், கொல்கத்தா உள்ளிட்ட 6 நகரங்களில் புதிய ஆய்வகங்களை அமைக்க ரூ. 126.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) கடந்த 5 ஆண்டுகளில் 66 பயிற்சி திட்டங்களை நடத்தி, 1,852 அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள மாநில வாரியான பட்டியலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சைபர் தடயவியல் பிரிவுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சண்டிகர் மற்றும் லடாக் போன்ற சில யூனியன் பிரதேசங்கள் அண்டை மாநிலங்கள் அல்லது மத்திய ஆய்வகங்களின் வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றன. இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222809)
வருகையாளர் எண்ணிக்கை : 24