மருந்துகள் துறை
2027 மார்ச் மாதத்திற்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 2:48PM by PIB Chennai
மக்கள் மருந்தகத் திட்டத்தின் வரம்பை மேலும் விரிவுபடுத்தவும், குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மார்ச் 2027-க்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தனிப்பட்ட தொழில்முனைவோர், அரசு சாரா நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதன் மூலம் மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படுகின்றன. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் www.janaushadhi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மக்கள் மருந்தக மையங்கள் என்பவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மருந்துகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகும். நாடு முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களுக்கு தினமும் 15 லட்சம் பேர் வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் மகாராஷ்டிராவின் ராய்காட், சிந்துதுர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் 2025, டிசம்பர் 31 நிலவரப்படி முறையே 12, 3 மற்றும் 4 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2024-25 நிதியாண்டில் ரூ. 22.98 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் விற்பனையாகியுள்ளன.
இந்தத் தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222527®=3&lang=1
****
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222804)
வருகையாளர் எண்ணிக்கை : 9