ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சணல் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு அரசு ஆதரவளிக்கிறது – மத்திய இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 1:37PM by PIB Chennai

தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சணல் பன்முகப்படுத்தப்பட்ட பொருட்களின் மேம்பாட்டுக்காக சந்தை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், மற்றும் சணல் பன்முகப்படுத்துதல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டங்களை அமல்படுத்துவதற்காக ரூ.124.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஆலை மற்றும் எந்திரம் கையகப்படுத்தலுக்கான மூலதன மானியத் திட்டம் சணல் வளத்துடன் கூடிய உற்பத்தி மையம், சணல் மூலப்பொருட்கள் வங்கி மற்றும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த சணல் கைவினைஞர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசு ஆதரவளிக்கிறது.

இத்தகவலை மக்களவையில் இன்று  மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா எழுத்துபூர்வாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222478&reg=3&lang=1

 

****

TV/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2222730) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी