புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சேமிப்பு மற்றும் மின்தொகுப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த உலகளாவிய கூட்டாண்மைகளை அரசு வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 1:32PM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சூரிய சக்தி, காற்றாலை , பசுமை ஹைட்ரஜன், சேமிப்பு, மின் தொகுப்பு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வலுவான நாடுகளுடன் ஒத்துழைக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், விருப்பக் கடிதங்கள், கூட்டு விருப்பப் பிரகடனங்கள் , எரிசக்தி உரையாடல்கள் மற்றும் கூட்டாண்மைகள் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் பல்வேறு தளங்களில் ஒத்துழைப்பின் வழிமுறைகள் வகுக்கப்படுகின்றன. இதில் கொள்கைப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, கற்றுக்கொண்ட பாடங்கள், பயிற்சிக்கான பணியாளர்கள் பரிமாற்றம், அறிவியல் தகவல்கள் பரிமாற்றம், பயிலரங்குகள், கருத்தரங்குகள், பணிக்குழு கூட்டங்களுக்கு  ஏற்பாடு செய்வது, பரஸ்பர ஆர்வமுள்ள பாடங்களில் கூட்டு ஆராய்ச்சி அல்லது தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்குவது ஆகியவை அடங்கும். இந்தச் செயல்பாட்டில், கூட்டாண்மைகளை எளிதாக்க வெளிநாட்டு அரசுகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் விரிவான தொடர்பு உள்ளது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் அதன் நிறுவனங்களும் வெளிநாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பெலாரஸ், பூடான், பிரேசில், கனடா, சிலி, டென்மார்க், டொமினிகன் குடியரசு, எகிப்து, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கினியா, ஐஸ்லாந்து, இந்தோனேசியா, ஈரான், இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், மெக்ஸிகோ, நெதர்லாந்து, நைஜீரியா, பெரு, போர்ச்சுகல், ருவாண்டா, சவுதி அரேபியா, ஸ்காட்லாந்து, சீஷெல்ஸ், சுவீடன், இலங்கை, தஜிகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், உருகுவே, அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா முத்தரப்பு மன்றம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் ஆகியவை அடங்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் டிஜிட்டல்மயமாக்கல், பசுமை கண்டுபிடிப்பு மற்றும் நிலையான நடைமுறைகளை வலுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் வீட்டுக் கூரை  சூரிய சக்தி: கட்டணமில்லா மின்சாரத் திட்டம், பிஎம்-குசும் திட்டம்   டிஜிட்டல் மேப்பிங் மற்றும் புவிசார் கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222475&reg=3&lang=1

 

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2222726) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada