பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எதிர்கால போர் முறை படிப்பு குறித்த 3-வது பதிப்பு புதுதில்லியில் தொடங்கியது

प्रविष्टि तिथि: 02 FEB 2026 10:54AM by PIB Chennai

கூட்டு போர்முறை கல்வி மையத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ், முப்படை எதிர்கால போர்முறை கல்வியின் 3-வது பதிப்பு புதுதில்லிடி மானக்ஷா மையத்தில் 2026 பிப்ரவரி 2 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. ராணுவ நடவடிக்கைகளில் மேம்பட்ட சிறப்புப் போர் முறை, சிறப்பு பாடங்களை உள்ளடக்கியதாக இந்த படிப்பு அமைந்துள்ளது. 

தொழில்நுட்பம் போர் முறையை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, நமது சிந்தனை, கருத்துகள், உத்திகள் ஆகியவற்றை மறுபார்வை செய்வதன் அவசியம் குறித்து இந்தப் படிப்பில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்பில் முப்படையினர், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் தனியார் தொழில்துறை உள்ளிட்ட பாதுகாப்புத் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். மேஜர் முதல் மேஜர் ஜெனரல் வரையிலான பல்வேறு உயர் அதிகாரிகள் ஜூனியர் அதிகாரிகளுடன் இணைந்து தங்களுடைய தொழில்நுட்பத் திறன், நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

***

(Release ID: 2221952)

TV/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2222395) आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati