ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 15.79 கோடி ஊரகப் பகுதி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
02 FEB 2026 4:16PM by PIB Chennai
நாட்டின் அனைத்து ஊரக பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு 2019 ஆகஸ்ட் முதல் ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்தி வருகிறது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது, 2019 ஆகஸ்டில் 3.23 கோடி (16.72%) ஊரகப் பகுதி வீடுகளில் மட்டும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. ஆனால் தற்போது 2026 ஜனவரி 28 வரை நாட்டில் உள்ள 19.36 கோடி ஊரகப்பகுதி வீடுகளில் 15.79 கோடி (81.56%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், செலவிடப்படும் என மதிப்பீடு செய்யப்பட்ட ரூ.3.60 லட்சம் கோடியில் ரூ.2.08 லட்சம் கோடியை மத்திய அரசு தமது பங்களிப்பாக வழங்கியுள்ளது.
இத்தகவலை மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு சோமண்ணா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222151®=3&lang=1
***
TV/IR/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2222377)
வருகையாளர் எண்ணிக்கை : 12