நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய இளையோர் நாடாளுமன்றத் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது

प्रविष्टि तिथि: 02 FEB 2026 4:40PM by PIB Chennai

தேசிய இளையோர் நாடாளுமன்றத் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இளையோர் நாடாளுமன்ற திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலும் கடைகோடி மற்றும் ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில், தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் தனிநபர்களும் பங்கேற்கும் வகையில், விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் தொடங்கப்பட்ட 2024-9-11 முதல் 2026-1-27 வரை கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை 4,432 பதிவுகள் நடைபெற்று 1,536 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 52,283 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இத்தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மாநிலங்களவையில் இன்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222172&reg=3&lang=1

***

TV/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2222373) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी