ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித்துறையின் மேம்பாட்டிற்கு வகைசெய்யும் ஒருங்கிணைந்த ஜவுளித்துறை மேம்பாட்டுத் திட்டம் மத்திய பட்ஜெட் 2026-27-ல் அறிவிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 2:01PM by PIB Chennai

2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி, கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் நிலையான உற்பத்தி ஆகியவற்றில் ஜவுளித் துறை வகிக்கும் முக்கியப் பங்கை அங்கீகரிக்கிறது. அதிக உழைப்பாளர்கள் தேவைப்படும் இத்துறையின் மேம்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நூலிழை முதல் ஆடை வரையிலும், கிராமத் தொழில்கள் முதல் சர்வதேச சந்தை வரையிலும் உள்ள ஜவுளிப் பொருட்களின் முழு மதிப்புச் சங்கிலியையும் வலுப்படுத்துவதற்காக, விரிவான மற்றும் ஒருங்கிணைந்த கொள்கை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நூலிழைத் திட்டம்: இயற்கை இழைகளான பட்டு, கம்பளி, சணல் மற்றும் செயற்கை இழைகள், நவீன கால இழைகள் போன்றவற்றின் தரத்தை அதிகரிக்கும். இதன் மூலம் உயர்தரத்திலான நூலிழைகள்  உள்நாட்டிலேயே அதிகளவில் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்தப்பட்டு, இறக்குமதி சார்புநிலையைக் குறைக்க வகை செய்யும். மேலும் இத்திட்டம், மேம்படுத்தப்பட்ட ஜவுளிப் பொருட்களில் புதுமைகளைப் புகுத்துவதையும் ஆதரிக்கும்.

ஜவுளித்துறை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம்: பாரம்பரிய ஜவுளித் தொகுப்புகளை நவீனமயமாக்குவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. இயந்திரங்களுக்கான மூலதன ஆதரவு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சோதனை மற்றும் சான்றிதழ் மையங்களை நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய கைத்தறி மற்றும் கைவினைத் திட்டம்: நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இலக்குகள் அடிப்படையிலான ஆதரவை வழ்ங்குவதற்கும்,  அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் வழிவகுக்கிறது. இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மேம்பாட்டிற்கு தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.

ஜவுளி-சுற்றுச்சூழல் முன்னெடுப்பு: உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையானதுமான ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியை ஊக்குவிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

திறன் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்தும் ‘சமர்த் 2.0’ திட்டம் ஆகிய ஐந்து முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்த ஜவுளித்துறை மேம்பாட்டுத் திட்டம் இருக்கும். மேலும், பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221486&reg=3&lang=1

***

TV/PD/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2222282) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati