சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் மத்திய பட்ஜெட் பிரதிபலிக்கிறது- மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

प्रविष्टि तिथि: 01 FEB 2026 8:39PM by PIB Chennai

2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்ற தாக்கல் செய்தார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நீடித்த சூழலியலுடன் சரிவிகித பொருளாதார வளர்ச்சி மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை மேம்படுத்துவதற்கான இளையோரை மையமாகக் கொண்ட பட்ஜெட் இது என்று பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ளார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் சுற்றுச் சூழலுடன் கூடிய சிறந்த சூழலியல் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்வதற்கான வலிமையான அடித்தளம் இந்த பட்ஜெட் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பட்ஜெட் பாதுகாப்பு மற்றும் வளமையான எதிர்காலத்தையொட்டிய இந்திய குடிமகன் ஒவ்வொருவருடைய கனவுகள் மற்றும் விருப்பங்களை உண்மையில் பிரதிபலிக்கிறது என்று திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221865&reg=3&lang=1

***

TV/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2222270) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी