பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை கிழக்கு பிராந்திய படைப்பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா பொறுப்பேற்றுக்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 2:25PM by PIB Chennai

விமானப்படை கிழக்கு பிராந்திய படைப்பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா இன்று (2026, பிப்ரவரி 1) பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவராவார். 1988, ஜுன் 11 அன்று இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.

மிக்-21, மிக்-23, மிக்-27, ஜாகுவார், எஸ்யூ-30 எம்கேஐ ரக போர் விமானங்களை இயக்கியவராவார். அவர் விபத்தின்றி 3200 மணிக்கு அதிகமான நேரம் விமானங்களை இயக்கியுள்ளார். ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இந்திய தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவில் அவர் பணியாற்றியுள்ளார்.

அவரது சிறப்பான சேவையை அங்கீகரித்து 2008-ம் ஆண்டு வாயு சேனா பதக்கமும், 2018-ம் ஆண்டு விஷிஸ்ட் சேவா பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.

நாட்டிற்கு 39 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய ஏர் மார்ஷல் சூரத் சிங் 2026, ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றதையடுத்து, ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா பொறுப்பேற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221521&reg=3&lang=1  

***

SG/PKV/SMB/IR/RK/KRபுதுதில்லி, பிப்ரவரி 1, 2026

SG/PKV/SMB/IR/RK/SH

(வெளியீட்டு அடையாள எண்: 2221915) வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi