பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட் 2026–27: பழங்குடியினர்நலனில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பட்ஜெட் என்று மத்திய அமைச்சர் திரு ஜுவல் ஓரம்புகழாரம்

प्रविष्टि तिथि: 01 FEB 2026 6:35PM by PIB Chennai

2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளடக்கிய பட்ஜெட் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாகஒடிசாவில் உள்ள பழங்குடி சமூகங்களை பட்ஜெட் அறிவிப்புகள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையத்தில் வைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

செய்தியாளர்களிடையே உரையாற்றிய அமைச்சர், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், பட்டியல் பழங்குடியினரின் முழுமையான, பகுதி சார்ந்த மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டையும் பட்ஜெட் வலுப்படுத்துகிறது என்று கூறினார்.

 

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் தற்போதைய முதன்மை முன்முயற்சிகளான ஏகலைவா உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளின் விரிவாக்கம்ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத் திட்டங்கள், பழங்குடியினர் பகுதிகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் சமூகம் சார்ந்த இடையீடுகள் முதலியவற்றை பட்ஜெட் மேலும் வலுப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

மத்திய பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்றும், பழங்குடி சமூகங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிர பங்காளிகளாக இருப்பதை உறுதி செய்கிறது என்றும் திரு ஜுவல் ஓரம் தெரிவித்தார்.

 

பட்ஜெட் அறிவிப்புகள், நிலையான வருமான உருவாக்கம், சமூக முன்னேற்றம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், எந்த பழங்குடி சமூகமும் விடுபட்டுவிடக் கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221773&reg=3&lang=1

 

(Release ID: 2221773)

***

VJ/PKV/BR/SH


(रिलीज़ आईडी: 2221905) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia