அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவை உலகளாவிய உயிரி உற்பத்தி மையமாக நிலைநிறுத்த பட்ஜெட்டில் "பயோஃபார்மா சக்தி" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 6:39PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். இதில் அறிவிக்கப்பட்டுள்ள "பயோஃபார்மா சக்தி" திட்டம், அடுத்த கட்ட தொழில்துறைப் புரட்சியில் இந்தியாவின் உலகளாவிய பங்கை ஊக்குவிக்கும் என்றும் இது இந்தியாவை ஒரு உலகளாவிய உயிரி உற்பத்தி மையமாக நிலைநிறுத்தும் என்றும் கூறியுள்ளார்.

உயிரி மருந்து உற்பத்தி, விண்வெளிக் கட்டமைப்பு, மேம்பட்ட எரிசக்தித் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதற்கு அவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.  ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பயோஃபார்மா சக்தி திட்டம், இந்தியாவின் உயிரிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் மருந்துகள், சாதனங்கள் இரண்டையும் உள்ளடக்கியது என்றும், இத்துறையில் இந்தியா உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் முன்னேற இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அணுமின் நிலையங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், உபகரணங்களின் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு அளிப்பது உட்பட, அணுசக்திச் சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பட்ஜெட்டில் உள்ள அம்சங்களையும் அமைச்சர் வரவேற்றுள்ளார். இந்த நடவடிக்கை, அணுசக்தித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று  டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221778&reg=3&lang=1

**

(Release ID: 2221778) 

VJ/PKV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221889) வருகையாளர் எண்ணிக்கை : 154
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी