மருந்துகள் துறை
மத்திய பட்ஜெட் மருந்துத் துறைக்கு ஒரு புதிய சகாப்தம்: மத்திய அமைச்சர் திரு. ஜே. பி. நட்டா
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 6:28PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில், மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நீண்ட கால தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பட்ஜெட்’ என்று மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா, கூறியுள்ளார்.
நாட்டில் உயிரி மருந்து சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைப் அவர் பாராட்டியுள்ளார். பயோபார்மா சக்தி என்ற புதிய திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹10,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது உயிரி மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று புதிய ரசாயன நிறுவனங்களை நிறுவுவதும், தற்போதுள்ள ஏழு நிறுவனங்களை மேம்படுத்துவதும், இந்தியாவின் ரசாயனத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று திரு ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரவேற்றுக் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பட்ஜெட் சுகாதாரம், மருந்துகள் ஆகிய துறைகளில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் வளர்ச்சியடைந்த, தற்சார்பு இந்தியா மீதான அரசின் வலுவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221766®=3&lang=1
*****
(Release ID: 2221766)
VJ/PKV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2221842)
வருகையாளர் எண்ணிக்கை : 61