PIB Headquarters
குப்பைக் கிடங்குகள் இல்லாத நிலை தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி
प्रविष्टि तिथि:
31 JAN 2026 1:30PM by PIB Chennai
சில ஆண்டுகளாக, தூய்மை நடவடிக்கைகளில் இந்தியா சீரான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள், நகர்ப்புறப் பகுதிகளில், சுகாதாரம், கழிவு மேலாண்மை கட்டமைப்புக்களை வலுப்படுத்தி, தூய்மையைப் பராமரிப்பிற்கு அடித்தளமிட்டுள்ளன.
தற்போது பல ஆண்டுகளாகக் குவிந்துள்ள பழைய குப்பைக் கிடங்குகளைச் சீரமைப்பதில் இத்தகைய முயற்சிகள் வாயிலாக உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த குப்பைக் கிடங்குகளை அகற்றுவது, நாட்டின் நகர்ப்புறத் தூய்மைப் பராமரிப்பு முயற்சிகளின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தப்பணிகளை விரைவுபடுத்த, மத்திய அரசு நவம்பர் 2025-ல் 'விரைவான குப்பைக் கிடங்கு சீரமைப்புத் திட்டத்தை' அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம், அக்டோபர் 2026-க்குள் "குப்பைக் கிடங்குகள் இல்லாத நிலையை உருவாக்குவது" என்ற இலக்கை அடைவதாகும். பெரும்பாலான குப்பைக் கிடங்குகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுவதை இத்திட்டம் இலக்காகக்க கொண்டுள்ளது .
குப்பைக் கிடங்கு சீரமைப்பு முடுக்கிவிடும் திட்டத்தின் மூலம் இந்தியா "பூஜ்ஜிய குப்பைக் கிடங்குகள்" என்ற இலக்கை நோக்கியுள்ளது. 61 சதவீதத்திற்கும் அதிகமான பழைய கழிவுகள் ஏற்கனவே பதப்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கழிவுகளில், ஏறத்தாழ 80 சதவீதம் உள்ள 214 அதிக விளைவுகளை ஏற்படுத்தும் பகுதிகளில் இந்தத் திட்டம் உயர் முன்னுரிமை அளிக்கிறது.
சீரமைக்கப்பட்ட கழிவுகள் மூலம் சாலை அமைக்கும் பொருட்கள், தாழ்வான பகுதிகளை நிரப்புதல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருள் போன்ற வளங்களாக மறு பயன்பாட்டிற்கும் உதவுகின்றன.
குப்பைக் கிடங்குகள் சீரமைக்கப்பட்டவுடன், நகர்ப்புறப் பகுதிகளில் தூய்மையான காற்று, பாதுகாப்பான நிலத்தடி நீர், குறைந்த தீ விபத்துகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அல்லது பசுமையான சூழல் போன்ற சூழல் அமைப்பு மேம்பாடு அடைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221171®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2221319)
आगंतुक पटल : 7