சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் பர்வ் விழாவில் குச்சிப்புடி நடன நிகழ்ச்சியுடன் ஆந்திரப் பிரதேச தினம் கொண்டாடப்பட்டது

प्रविष्टि तिथि: 31 JAN 2026 1:54PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் பாரத் பர்வ் 2026 விழாவில், நேற்றைய விழா ( ஜனவரி 30, 2026) ஆந்திரப் பிரதேச தினமாகக் கொண்டாடப்பட்டது. இதில் அந்த மாநிலத்தின் வளமான கலாச்சார, கலை, சுற்றுலா பாரம்பரியம் காட்சிப்படுத்தப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரத் பர்வ், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரம், சுற்றுலா, உணவு வகைகள், கைத்தறி ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் ஒரு பிரமாண்டமான தேசிய தளமாக செயல்படுகிறது.

இதில் ஆந்திரப் பிரதேச அரங்கம் ஒரு முக்கிய ஈர்ப்பாக உருவெடுத்தது. துடிப்பான சுற்றுலா காட்சிகள், பாரம்பரிய உணவு அரங்கம், நேர்த்தியான கைத்தறி கண்காட்சி ஆகியவற்றை இந்த அரங்கம் வழங்கியது. பார்வையாளர்கள் மாநிலத்தின் வரலாற்று மரபு, கலை மரபுகள் ஆகியவற்றை  அறிந்து கொண்டனர்.

ஆந்திரப் பிரதேச தினத்தின் முக்கிய சிறப்பம்சமாக 46 புகழ்பெற்ற கலைஞர்களின் பிரமாண்டமான குச்சிப்புடி பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பாரம்பரிய நடன மரபின் நேர்த்தியை உயிர்ப்பித்து வழங்கினர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்ததுடன் மாநிலத்தின் கலாச்சார நெறிமுறைகளைப் பிரதிபலித்தது.    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221180&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2221315) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी