நிதி அமைச்சகம்
2025-26-ம் நிதியாண்டின் அரசின் கணக்குகள் குறித்த டிசம்பர் மாத மாதந்தர ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
30 JAN 2026 4:21PM by PIB Chennai
மத்திய அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான கணக்குகள் குறித்த மாதாந்தர ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாத கணக்குகள் குறித்த இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 2025-26-ம் நிதியாண்டின் டிசம்பர் மாதம் வரையிலான மத்திய அரசின் வரி வருவாய் 25,25,156 கோடி ரூபாயாக இருந்தது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் 72.2 சதவீதமாகும். அரசின் நிகர வரி வருவாய் 19,39,254 கோடி ரூபாயாகவும் வரி அல்லாத வருவாயாக 5,39,855 கோடி ரூபாயும் கடன் மூலதனம் அல்லாத வருவாயாக 46,047 கோடி ரூபாயும் உள்ளது. மத்திய அரசால் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக விடுவிக்கப்பட்டுள்ள நிதி 10,38,164 கோடி ரூபாயாகவும் இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 1,37,014 கோடி ரூபாய் கூடுதலாகும்.
அரசின் ஒட்டுமொத்த செலவினத்தொகை 33,80,998 கோடி ரூபாயாகும். இது 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 66.7 சதவீதமாகும். இதில் வருவாயின செலவினத் தொகையாக 25,93,063 கோடி ரூபாயும் மூலதனச் செலவினங்களாக 7,87,935 கோடி ரூபாயும் அடங்கும். மொத்தம் வருவாயின செலவினங்களில் 9,11,059 கோடி ரூபாய் கடனுக்கான வட்டித் தொகையாகவும் 3,17,490 கோடி ரூபாய் முக்கியத் திட்டங்களுக்கான மானியத் தொகையாகவும் உள்ளது.
(Release ID: 2220852)
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2221063)
आगंतुक पटल : 8