புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் முன்னறிவிப்பு அமைப்புமுறை வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2026 5:08PM by PIB Chennai

பாரத் முன்னறிவிப்பு அமைப்புமுறை மூலம் ஒவ்வொரு 6 கி.மீ. வரை தனித்துவமான முன்னறிவிப்புகளை உருவாக்க முடியும்.

பாரத்எஃப்எஸ், 6.5 கி.மீ. தூரத்திற்கு மழைப்பொழிவு, வெப்பநிலை, குறைந்த அழுத்த மண்டல உருவாக்கம் மற்றும் பிற முக்கியமான வளிமண்டல நிலைமைகள் குறித்த 10 நாள் முன்னறிவிப்பை வழங்குகிறது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பேரிடர் பாதிப்புக்குள்ளான சமூகங்கள் உட்பட பல துறைகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதில் மாதிரி வழிகாட்டுதலை இது வழங்குகிறது.

இந்தத் தகவலை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர்  (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2220205)

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2220778) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी