தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ராஜஸ்தானில் கல்பேலியா சமூகத்தினர் இடுகாடு கோரி நடத்திய போராட்டத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
29 JAN 2026 5:46PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கல்பேலியா சமூகத்தினர் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க தனியாக இடுகாடு கோரி 2025 டிசம்பர் 29 அன்று ஒருவரின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியானதையடுத்து இதனை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாக இருக்குமானால், அது கடுமையான மனித உரிமை மீறல் விஷயம் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இது சம்பந்தமாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ராஜஸ்தான் மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220273®=3&lang=1
***
TV/SMB/RJ/RK
(रिलीज़ आईडी: 2220710)
आगंतुक पटल : 6