சுற்றுலா அமைச்சகம்
நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன – மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 4:13PM by PIB Chennai
நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் சுற்றுலா வர்த்தகத்துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு சர்வதேச சுற்றுலா வர்த்தக கண்காட்சிகள், நிகழ்ச்சிகள், இந்திய உணவு திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டன.
இந்நடவடிக்கைகளுக்காக 2024 – 25-ம் ஆண்டில் ரூ 31.99 கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சகம் அளித்த தகவலின்படி 2024-ம் ஆண்டில் 205.69 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தந்தனர்.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220119®=3&lang=1
**
TV/IR/RK/EA
(रिलीज़ आईडी: 2220557)
आगंतुक पटल : 8