சுற்றுலா அமைச்சகம்
பாரதத் திருவிழா 2026-ன் புதுமையான அறிவியல் கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்கிறது
प्रविष्टि तिथि:
29 JAN 2026 12:36PM by PIB Chennai
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் 2026 ஜனவரி 26 முதல் 31 வரை செங்கோட்டை அருகே பாரதத் திருவிழா 2026-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்களின் ஒரு பிரிவான தில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையம் அமைத்துள்ள அறிவியல் கண்காட்சிப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
மெய்நிகர் முறையில் மிதிவண்டி ஓட்டுதல், இசைக் கருவிகள் இல்லாமலேயே பார்வையாளர்கள் இசை நிகழ்ச்சியை நடத்தும் டிஜிட்டல் இசைக்குழு போன்ற நவீனத் தொழில்நுட்பத்திலான நிகழ்ச்சிகள் பொதுமக்களிடம் அறிவியல் உணர்வை ஊக்கப்படுத்துகின்றன. செயற்கைத் தொழில்நுட்பம் பார்வையாளர்களை பிரபல திரைப்பட பாத்திரங்களாக அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடைகளை அணிந்தவர்களாகவோ மாற்றுகிறது. இது பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, நினைவில் கொள்ளத்தக்க புகைப்பட வாய்ப்புகளையும் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219961®=3&lang=1
***
TV/SMB/RJ/EA
(रिलीज़ आईडी: 2220549)
आगंतुक पटल : 9