இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு – காஷ்மீரில் விளையாட்டுதுறை மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:03PM by PIB Chennai

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறப்பு நடவடிக்கையாக ஒரு மாவட்டத்திற்கு 5 கேலோ இந்தியா மையங்கள் அமைப்பதற்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.  இதுவரை யூனியன் பிரதேசத்தில் 100 கேலோ இந்தியா மையங்கள் அமைக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளன.

இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சத்தின் மூலம் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் வாரியாக இல்லாமல் திட்டம் வாரியாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 – 24-ம் நிதியாண்டில் ரூ 880 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ 872.2 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2024 – 25-ம் ஆண்டில் ரூ 746.54 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ 620.75 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220019&reg=3&lang=1

**

TV/IR/RK/EA


(रिलीज़ आईडी: 2220469) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी