உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பதப்படுத்துதல் தொழில்துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 3.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2026 3:16PM by PIB Chennai

நாடு முழுவதும் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் பல்வேறு வகைகளின் கீழ் மொத்தம் 169 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை சுமார் ரூ. 9,207 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ 2,162.55 கோடி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 35 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான பதப்படுத்துதல் மற்றும் பாதுகாக்கும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220064&reg=3&lang=1

**

TV/IR/RK/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2220360) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी