அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குடியரசு தினக்கொண்டாட்டங்களில் பங்கேற்ற அறிவியல் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடினார்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 4:28PM by PIB Chennai

குடியரசு தினக்கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தில்லிக்கு அழைக்கப்பட்டிருந்த சுமார் 500 புத்தொழில் துறையினர், அறிவியல் அறிஞர்கள், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடினார்.

விண்வெளி, உயிரித்தொழில்நுட்பம், வாழ்வியல், புவி அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் போன்ற முன்னணி துறைகள், சிறந்த அறிஞர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு சூழலில் பங்களிப்பு செய்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் புதுமை கண்டுபிடிப்பாளர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இவர்களில் சுமார் 100 பேர் மாலையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் குடியரசுதின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனிப்பட்ட முன்முயற்சியின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அழைக்கப்படுகின்றனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219161&reg=3&lang=1  


***

TV/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2219323) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी