இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர்களுக்கான பயிலரங்கு புதுதில்லியில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
27 JAN 2026 4:27PM by PIB Chennai
புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் வில்வித்தை மற்றும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுகளைச் சேர்ந்த, இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சியாளர்களுக்கான நான்கு நாள் விளையாட்டு அறிவியல் பயிலரங்கு திங்கட்கிழமை அன்று தொடங்கியது.
இப்பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசிய விளையாட்டுத் துறைச் செயலாளரும் இந்திய விளையாட்டு ஆணைய தலைமை இயக்குநருமான திரு ஹரி ரஞ்சன் ராவ், அன்றாடப் பயிற்சி முறைகளில் விளையாட்டு அறிவியலை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார். அனைத்து சாத்தியமான வழிகளிலும் விளையாட்டு அறிவியல் முன்முயற்சிக்கு அமைச்சகமும், அரசும் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விளையாட்டு அறிவியலை, தடகள வீரர்களுக்கு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திறன்மிக்க பயிற்சியை உறுதி செய்யவும், காயம் ஏற்படுவதைத் தடுக்கவும், விளையாட்டுத்துறையில் நீண்டகாலம் இடம் பெறவும் விளையாட்டு அறிவியல் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், இது விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிதிச் சுமையை பெருமளவில் குறைப்பதாகவும் திரு. ஹரி ரஞ்சன் ராவ் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219162®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2219295)
आगंतुक पटल : 9