பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் டிஆர்டிஓ-வின் தொழில்நுட்பம் திறம்பட பயன்பட்டது – பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
27 JAN 2026 1:29PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவின் செயல்பாட்டு நடவடிக்கையின் தயார் நிலையை வலுப்படுத்துவதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் தேசிய சிந்தனையான தற்சார்பை அடைவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) முக்கியப் பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார். 77-வது குடியரசு தின அணிவகுப்பை சிறப்பு விருந்தினர்களாக பார்வையிட்ட டிஆர்டிஓவின் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களிடையே அவர் உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது டிஆர்டிஓ-வின் தொழில்நுட்பம் திறம்பட பயன்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் பாதுகாப்புத் துறையின் விரைவான மாற்றத்திற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முக்கிய பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் தற்போது விரைவாக மாறிவருவதாக குறிப்பிட்ட திரு. ராஜ்நாத் சிங், எந்தவொரு புதிய தொழில்நுட்பமும், வரும் ஆண்டுகளில் அவசியமானதாக இருக்கக் கூடும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219026®=3&lang=1
**
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2219179)
आगंतुक पटल : 13