உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
பிரதமர் தலைமையில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக ஜம்முவில் வேலைவாய்ப்பு திருவிழா
प्रविष्टि तिथि:
24 JAN 2026 6:21PM by PIB Chennai
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நாடு தழுவிய வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று ஜம்முவின் பலோராவில் உள்ள பிஎஸ்எஃப் எல்லைத் தலைமையகத்தில் ஒரு வேலைவாய்ப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களிடையே காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
ஜம்முவில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் தலைமை தாங்கினார். அவர் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு. பாஸ்வான், இளைஞர் அதிகாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். மேலும், வேலைவாய்ப்பு திருவிழா என்பது "அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி" என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
முப்படைகளின் பங்கை அங்கீகரித்த அவர், நாட்டின் எல்லைகளில் நாட்டைப் பாதுகாக்கும் வீரர்கள், குடிமக்களுக்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்காக மகத்தான தியாகங்களைச் செய்கிறார்கள் என்றும், அவர்களின் அர்ப்பணிப்பின் மூலம், இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு மரியாதைக்குரிய மற்றும் கண்ணியமான நிலையை பெற்றுத் தந்துள்ளனர் என்றும் கூறினார்.
வேலைவாய்ப்பு திருவிழா என்பது, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இதில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாகப் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களுக்கு 61,000-க்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218223®=3&lang=1
***
TV/PKV/RJ
(रिलीज़ आईडी: 2218298)
आगंतुक पटल : 7