பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பணி நியமனக் கடிதங்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான உறுதி மொழிப் பத்திரங்கள் : பிரதமர் திரு நரேந்திர மோடி
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் நோக்கம்: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
प्रविष्टि तिथि:
24 JAN 2026 3:31PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சண்டிகரில் உள்ள பெஹ்லானா முகாமில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP) போக்குவரத்துப் பட்டாலியனில் இன்று (24.01.2026) வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் வழங்கினார். விழாவில், பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணி நியமனக் கடிதங்களை மொத்தம் 107 பேர் பெற்றனர்.
காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகையில், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை ஊக்குவித்து, தேசிய வளர்ச்சி என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். இந்தப் பணி நியமனக் கடிதங்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான உறுதி மொழிப் பத்திரங்கள் என்று பிரதமர் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, அரசுப் பணி என்பது, மக்கள் சேவைக்கான ஒரு பொறுப்பு என்று கூறினார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்த நியமனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு திருவிழா தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இது ஆட்சேர்ப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் நோக்கம் என்று திரு ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218119®=3&lang=1
***
(Release ID: 2218119)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218190)
आगंतुक पटल : 9