PIB Headquarters
தேசிய பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
23 JAN 2026 1:56PM by PIB Chennai
இந்தியாவில் பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
2008-ம் ஆண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த தினம், பாலின பாகுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சம வாய்ப்புகளை ஊக்குவிக்கவும், அதிகாரம் பெற்ற குடிமக்களாக பெண்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கவும் ஒரு தளமாக செயல்படுகிறது. மேலும், 2047-ம் ஆண்டுக்குள் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்நாள் திறம்பட ஒத்துப்போகிறது.
பாலின சார்பு, பெண் சிசுக்கொலை, குழந்தை பாலின விகிதம் தொடர்பான சவால்கள், குழந்தைத் திருமணம் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான தடைகள் உட்பட பெண்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை தேசிய பெண் குழந்தைகள் தினம் வழங்குகிறது. மேலும், பெண் குழந்தைகளை சமமாக மதிப்பதற்கு சமூக அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த இது வலியுறுத்துகிறது. இதன் மூலம் அவர்களின் முழுமையான வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.
பெண்களின் கல்வியை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, டிஜிட்டல் உள்ளடக்கம், ஸ்டெம் துறைகளில் பங்கேற்பு, மனநல ஆதரவு, வன்முறையிலிருந்து பாதுகாப்பு மற்றும் தலைமைப் பணிகளுக்கான வாய்ப்புகள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217624®=3&lang=1
(Release ID: 2217624)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2217947)
आगंतुक पटल : 31