குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய ராணுவ வீரர்களின் பங்களிப்பிற்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு

प्रविष्टि तिथि: 23 JAN 2026 7:16PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு மண்டபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற பராக்கிரம தினக் கொண்டாட்டங்களில் இந்திய குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அவர், பராக்கிரம தினம் என்பது நேதாஜிக்கு அஞ்சலி செலுத்தும் தினம் மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக மக்களிடையே வீரத்தைப் பரப்பும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்று கூறினார். இந்திய குடிமைப் பணிகளில் ஒரு மதிப்புமிக்க பதவியை ஏற்க மறுத்தது, நாட்டின் முழுமையான சுதந்திரத்திற்காக உயர் பதவியைத் துறக்க அவர் எடுத்த முடிவு உட்பட, நேதாஜியின் பல்வேறு தியாகங்களை அவர் நினைவு கூர்ந்தார்.

 

தென்னிந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுடனான நேதாஜியின் ஆழமான தொடர்பை சுட்டிக்காட்டிய திரு ராதாகிருஷ்ணன், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  இந்திய தேசிய ராணுவ வீரர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவு கூர்ந்தார். நேதாஜியின் வாழ்க்கையும், லட்சியங்களும் இளைஞர்களை கிளர்ந்தெழச் செய்யவும், நாட்டின் எதிர்காலத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும், இந்தியப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஒரு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிச் செயல்படவும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அவர் கூறினார்.

 

இந்த நிகழ்வின் போது, மேற்குவங்க ஆளுநர் திரு சி. வி. ஆனந்த போஸ் எழுதிய “அப்பா, நேதாஜியை நினைவு கூர்கிறார்” என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்.  இந்த நிகழ்வில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் தொடர்புடைய அரிய மற்றும் குறிப்பிடத்தக்க நினைவுப் பொருட்களின் ஒரு சிறப்பு கண்காட்சியையும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். கண்காட்சியில் நேதாஜியின் எழுதுகோல், அவரது கல்விச் சான்றிதழ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் பதக்கங்கள் முதலியவை இடம்பெற்றுள்ளன. அவை, மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை, லட்சியங்கள் மற்றும் தியாகங்களைப் பற்றிய தெளிவான பார்வையை முன்வைக்கின்றன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217840&reg=3&lang=1

(Release ID: 2217840)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2217946) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी