குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதில் நேதாஜியின் துணிச்சல், ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் - குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
23 JAN 2026 4:09PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதில் நேதாஜியின் துணிச்சல், ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பராக்கிரம தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவின் சிறந்த குடிமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியது மட்டுமின்றி நிர்வாகம் குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையை நேதாஜி கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். வலிமையான, வறுமையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் அவர் செயலாற்றியதாக குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா குறித்த நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை நாட்டைக்கட்டமைப்பதில் உத்வேகம் அளித்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217676®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2217836)
आगंतुक पटल : 12