இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை பேக்கிங் செய்ய பயோ பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை
प्रविष्टि तिथि:
22 JAN 2026 5:38PM by PIB Chennai
பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை பேக்கிங் செய்வதற்கு பயோ பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் இன்று (22.01.2026) நடைபெற்றது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இத்தகைய பொருட்களின் சில்லறை விற்பனைக்கான பேக்கிங் செய்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
மட்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்வதற்கான ஆய்வுப் பணிகள் குறித்தும் இதில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த மட்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
குறித்த கால வரையறைக்குள் இதற்கான செயல் திட்டத்தை இறுதி செய்வது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மட்கும் தன்மை கொண்ட பொருட்களுக்கான தெளிவான வரையறையை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரநிலை சோதனைக்கு உட்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217328®=3&lang=1 ***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2217409)
आगंतुक पटल : 11