ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலகளாவிய மருத்துவ சுற்றுலா மையமாக இந்தியா உருவாகி வருகிறது

प्रविष्टि तिथि: 22 JAN 2026 12:56PM by PIB Chennai

உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு, மிகவும் திறமையான சுகாதார நிபுணர்கள், குறைந்த செலவில் சிகிச்சை ஆகியவற்றை பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் முழுமையான ஆரோக்கியம் என்ற  நாட்டின் தனித்துவமான வலிமையுடன் இணைத்து, மருத்துவ மதிப்புப் பயணத்தில் வேகமாக வளர்ந்து வரும் இடங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது.

சிக்கலான அறுவை சிகிச்சை முதல் நீண்டகால ஆரோக்கிய சிகிச்சை வரை, இந்தியா இன்று ஒருங்கிணைந்த சுகாதாரச் சூழல் அமைப்பை வழங்குகிறது. இது தரம், குறைந்த கட்டணம் மற்றும் நம்பிக்கையைத் தேடும் சர்வதேச நோயாளிகளை அதிகளவில் ஈர்க்கிறது. உலக அளவில் தரப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் புகழ்பெற்ற நிபுணர்களால் இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் பாரம்பரிய ஆயுஷ் அமைப்புகள் நாட்டின் மருத்துவ சுற்றுலா ஈர்ப்புக்கு தனித்துவமான நோய்த் தடுப்பு மற்றும் ஆரோக்கியப் பரிமாணத்தை சேர்க்கின்றன.

மரபு சார்ந்த மருத்துவத்தைப் பாரம்பரிய சுகாதார அமைப்புகளுடன் இணைக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்புப் பயண அணுகுமுறையை வலுப்படுத்தும் வகையில், ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  திரு பிரதாப்ராவ் ஜாதவ், இந்தியாவின் பலம் அதன் ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். "மருத்துவ மதிப்புப்  பயணம் என்பது மலிவு விலையைப் பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கை, தரம் மற்றும் விளைவுகளைப் பற்றியது. இந்தியாவின் ஆயுஷ் அமைப்புகள் முழுமையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும்" என்று அமைச்சர் கூறினார்.

இந்தியா வளர்ந்து வரும் வேகத்தைத் தரவுகள் பிரதிபலிக்கின்றன. இந்தியாவுக்கு வருகை தரும் சர்வதேச நோயாளிகளின் எண்ணிக்கை 2020-ல் 1,82,945 என இருந்தது. இது 2024-ல் 6,44,387 ஆக அதிகரித்துள்ளது. அண்மை ஆண்டுகளில், யோகா, ஆயுர்வேதம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த சிகிச்சைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கியப்  பங்களிப்பு செய்துள்ளன. இந்தியாவை முழுமையான, சான்றுகள் அடிப்படையிலானபராமரிப்புக்கு விருப்பமான இடமாக நிலைநிறுத்தியுள்ளன.

இந்தியாவின் தேசிய மருத்துவ மதிப்புப் பயண வரைபடத்தை முன்னேற்றுவதில் வலுவான அரசு-தனியார் கூட்டாண்மை மாதிரி முக்கியப் பங்கு வகித்துள்ளது. மருத்துவ உள்கட்டமைப்பில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு, மருத்துவ சேவை ஏற்றுமதிகளுக்கான நிதி ஊக்கத்தொகை, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய தொடர்பு போன்ற கொள்கைத் தலையீடுகள் உலகளாவிய, போட்டித்தன்மை வாய்ந்த சுகாதாரச் சூழல் அமைப்பை உருவாக்க உதவியுள்ளன.

2024-ல் மும்பையிலும், மே 2025-ல் சென்னையிலும் நடைபெற்ற ஆயுஷில் உலகளாவிய ஒருங்கிணைப்பு: மருத்துவ மதிப்புப் பயணத்தின் மூலம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மாற்றுதல்உச்சி மாநாடு உட்பட, முக்கிய ஆயுஷ் தளங்களில் மருத்துவ மதிப்புப் பயணம் ஒரு மையக் கருப்பொருளாக இருந்து வருகிறது. இந்தியாவின் பரந்த சுற்றுலா மற்றும் சுகாதாரக் குறியீட்டின் ஒரு பகுதியாக ஆயுஷ் அடிப்படையிலான நல்வாழ்வு சேவைகளை மேம்படுத்துவதற்காக ஐடிடிசி போன்ற அமைப்புகளுடனும் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217203&reg=3&lang=1

***

 

AD/SMB/KR


(रिलीज़ आईडी: 2217309) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी