உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமான ஓட்டிகளுக்கான 'மின்னணு உரிம' சேவையைத் தொடங்கியது விமான போக்குவரத்து இயக்குநரகம்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 7:42PM by PIB Chennai
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானப் போக்குவரத்து பைலட் உரிமத்திற்கான 'மின்னணு பணியாளர் உரிமம்' சேவையைத் தனது தலைமையகத்தில் இன்று தொடங்கி வைத்தது. இது டிஜிசிஏ-வின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் பேசிய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனர், "பாதுகாப்பான மற்றும் நவீன டிஜிட்டல் முறைகள் மூலம் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்த 'மின்னணு உரிமம்' ஒரு முக்கியப் படியாகும்," என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தொழில்நுட்பக் குழுவினருக்கும், இதற்கு ஒத்துழைப்பு நல்கிய விமானப் போக்குவரத்துத் துறையினருக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த மின்னணு உரிமமானது, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உரிமத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதோடு, முறைகேடுகளைத் தவிர்க்கவும், உடனுக்குடன் சரிபார்க்கவும் உதவும். விமான ஓட்டிகள் இந்த உரிமத்தை 'eGCA' மொபைல் செயலி மூலம் எளிதாக அணுக முடியும். முன்னதாக, 2025 பிப்ரவரி மாதம் வணிக ரீதியிலான பைலட் உரிமத்திற்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்து பைலட் உரிமத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217043®=3&lang=1
---
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2217126)
आगंतुक पटल : 6