தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு டிராய் (TRAI) நடத்திய சிறப்பு கருத்தரங்கம்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 3:33PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவுடன் இணைந்து, ‘தொலைத்தொடர்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு ’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஒன்றை புது தில்லியில் நடத்தின. 2026-இல் நடைபெறவுள்ள 'இந்தியா - சர்வதேச ஏஐ மாநாட்டிற்கு' முன்னோட்டமாக இந்நிகழ்வு அமைந்தது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய டிராய் தலைவர் திரு. அனில் குமார் லஹோட்டி, "செயற்கை நுண்ணறிவு என்பது தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலம் மட்டுமல்ல, அதுவே தற்போதைய அடிப்படைத் தேவையாகவும் மாறியுள்ளது. நெட்வொர்க் தானியக்கம் முதல் தேவையற்ற அழைப்புகளைக் கண்டறிவது வரை ஏஐ முக்கியப் பங்கு வகிக்கிறது," என்றார். எனினும், ஏஐ பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையும், பாதுகாப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கின் 5ஜி மற்றும் ஃபைபர் கட்டமைப்பில் ஏஐ மூலம் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரி செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
பயனர்களின் விருப்பத்திற்கேற்ப புதிய டேட்டா பேக்குகள் மற்றும் சலுகைகளை ஏஐ மூலம் தனிப்பயனாக்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல், போலி அழைப்புகள் மற்றும் தேவையற்ற குறுஞ்செய்திகளை ஏஐ தொழில்நுட்பம் கொண்டு தடுத்து நுகர்வோருக்கு பாதுகாப்பான வழிமுறைகளை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் தலைமை இயக்குர் திரு. அரவிந்த் குமார், ஐஐடி காந்திநகர் இயக்குனர் திரு. ரஜத் மூனா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216895®=3&lang=1
---
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2217098)
आगंतुक पटल : 10