PIB Headquarters
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்தல்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 12:40PM by PIB Chennai
செல்வமகள் சேமிப்புத் திட்டம், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அதிகாரமளித்தல் நடவடிக்கைகளுக்கு சக்திவாய்ந்த அடையாளமாகத் திகழ்கிறது.
இது அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவதற்கும், அவர்களது பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' திட்டத்தின் கீழ், 22 ஜனவரி 2015 அன்று தொடங்கப்பட்ட இந்த சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைக்கு உதவிடும் என்று கருதப்பட்டது. இது நிதிப் பாதுகாப்பு, சமூக மாற்றத்திற்கு இடையே ஒரு பாலமாக வடிவமைக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக முன்கூட்டியே திட்டமிட குடும்பங்களை ஊக்குவிப்பதன் மூலம், இத்திட்டம் அடித்தட்டு மக்களிடையே தன்னம்பிக்கை, உள்ளடக்கம், நீண்ட கால முன்னேற்றம் என்ற உணர்வை ஏற்படுத்த உதவியுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு 22 ஜனவரி 2026 அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த வாக்குறுதியில் லட்சக்கணக்கான குடும்பங்களின் கூட்டு நம்பிக்கைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, 4.53 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் வாயிலாக, குடும்பங்களையும், சமூகங்களையும், மேம்படுத்துவதுடன் நாட்டையும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216748®=3&lang=1
---
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2217038)
आगंतुक पटल : 26