மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
குரல் வழி முறைக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 12:52PM by PIB Chennai
குரல் வழி முறைக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு, டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, முன்னுரிமை அளித்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில் இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, உத்தரப் பிரதேச மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மின்-ஆளுமை மையம் ஏற்பாடு செய்திருந்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்றது. இந்த மாநாடு 20 ஜனவரி 2026 அன்று லக்னோவில் நடைபெற்றது. மாநில அரசின் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், மத்திய அரசின் பிரதிநிதிகள், தொழில்துறையினர், கல்வி நிறுவனங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, அம்மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, டிஜிட்டல் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திறனை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடுகள், தொழில்துறை ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு முயற்சிகள், மாநில செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களான எதிர்காலத் திறன் மேம்பாட்டிற்கான முதன்மைத் திட்டம், பிராக்யா திட்டத்திற்கான முன்முயற்சி ஆகியவை குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன. பொறுப்புணர்வுடன் கூடிய, மதிப்பீடு செய்யத்தக்க அளவிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கான நிறுவன மற்றும் மனிதத் திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.
பாஷினி தளம், பன்மொழி மற்றும் குரல்வழி முறைக்கு முன்னுரிமை அளிக்கும் டிஜிட்டல் நடைமுறைகளை செயல்படுத்துவதில் அதன் பங்களிப்பு குறித்து பிரத்யேக தொழில்நுட்ப அமர்வும் நடைபெற்றது. இந்த அமர்வில், மொழிபெயர்ப்பு பயன்பாடு அடிப்படையிலான செயலி, தானியங்கி முறையில் பேச்சு அறிதல், உரையிலிருந்து பேச்சு மற்றும் உரையாடல் செயற்கை நுண்ணறிவு கருவிகளை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான சேவைகள் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஒருங்கிணைப்பது போன்ற அம்சங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இது பல்வேறு மொழி பேசும் மக்களுக்கும் டிஜிட்டல் பொதுச் சேவைகளை உள்ளடக்கிய வகையில் அவற்றின் பயன்பாடு கிடைக்க வகை செய்கிறது. இந்த அமர்வில், பாஷினி செயலியின் பேச்சு-உரை மற்றும் மொழிபெயர்ப்புக் கருவியான 'ஸ்ருத்லேக்' - கின் நேரடி செயல்விளக்கமும் வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216760®=3&lang=1
***
AD/SV/PD
(रिलीज़ आईडी: 2216961)
आगंतुक पटल : 15